C. N. Annadurai
'விடுதலை! வந்துவிட்டது தங்கத்திற்கு! லிங்கத்தின் பாடு கொண்டாட்டந்தாண்டா. இனி மேலே அவன் அவன்தான்; நாம்ப நாம்பதான்.''நம்மை எல்லாம் மறந்து விட்டாலும், நாராயணனை மாத்திரம் மறக்கமாட்டான். அவங்க இரண்டு பேரும், வந்த நாளா ஜோடி போட்டுக்கிட்டாங்க. என்னமோ சூது இருக்கு.''நாராயணன் மந்திரக்காரனாச்சே! ஏதாகிலும் மந்திரம் கிந்திரம் கற்றுக் கொடுத்திருப்பான்.''மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவன், இங்கே யேண்டா வந்து மாட்டிக்கிட்டு கம்பி எண்ணிக்கிட்டு கிடக்கிறான்.''இங்கேன்னா என்னடாப்பா! இந்தே பெரிய வூடு உங்க அப்பங் காலத்திலே கண்டெயா? நம்ம ராணியம்மா சத்திரத்திலே மணியடிச்சா சோறு; மயிர் முளைச்சா மொட்டை''தன்னானே தானென்னதன்னான தன்னானே.''சாலையிலே ரெண்டுமரம்சர்க்காரு வைத்தமரம்...'வார்டர் நம்பர் 9, ரொம்ப முரட்டுப் பேர்வழி 'பைல், பைல்' என்று கூவினால், எவ்வளவு முரட்டுக் கைதியும், பெட்டியில் போட்ட பாம்பு போலத்தான்! அவனும் வந்தான்! நாம் மேலே தீட்டியபடி வம்பளந்து கொண்டும், பாடிக் கொண்டுமிருந்த கைதிகள், பேச்சை நிறுத்திக்கொண்டு சிமிட்டி திண்ணை மேலே சிவனே என்று உட்கார்ந்து விட்டார்கள்.