Annadurai
'அம்மாடியோ...! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா...?'சாமி சாட்சியாச் சொல்றேன்...பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கூட வந்து ’கெக்கெபிக்கே’ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா...?நானென்ன மாடப்புறவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடி வந்து, உன் தோளிலே தொத்திக்கிட...சினிமா பார்த்துப் பார்த்து, நீ வேண விளையாட்டக் கத்துகிட்டே... இதோ பாரு... எனக்கு அதெல்லாம் பிடிக்காது சொல்லிட்டேன்...ஆமா, நீ இதுவரையிலே என்னிடம் சொல்லவே இல்லையே, உனக்குப் பொரிவிளங்கா உருண்டைன்னா, ரொம்பப் பிரியமாமே... இந்தா, இரண்டுதான் மிச்சமாச்சி...உன் கண்ணுக்கு நான் அழகுன்னா, ஊரார் அவ்வளவு பேருமா, என்னை அழகின்று சொல்லுவாங்க; குப்பி பாட்டி என்னை என்னா சொல்லும் தெரியுமா?போடிபோடி கோணவகுடுக்காரி, எப்பப் பார்த்தாலும் தூங்கிக்கிட்டு கிடக்கறயே, பொண்களுக்கு இதுவா இலட்சணம்னு சொல்லும்...அப்பப்பா! போதும்போதும்னு ஆயிடுது உன்னன்டெ மாட்டிட்டா.... இது என்ன கன்னமா பச்சரிசி மாங்காயா? முகத்தைப் பாரு சாமியாரு மாதிரி...! தா! ரொம்ப விளையாடாதே, வெட்கமா இருக்கு... சிரிப்பு பகீல்னு வருது... இந்தா அந்தா பக்கம் சோளக் கொல்லையிலேதான் சொக்கப்பன் இருக்கறான்... அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந்தது, அவ்வளவுதான், வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டி விட்டுத்தான் தூங்கப் போவான்...உன்னை நம்பாமெ நான் வேற யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லைõயானா, இப்படி உங்கூடப் பழகுவனா. பேசுவனா... ஆனா, ’எதுக்கும் ஆகவேண்டிய காரியத்தைக் காலகாலத்திலே முடிச்சுட வேணும்டி, ஆம் பிள்ளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக்காது... எந்தப் பாவிமகனாவது,