Arasaanda Aandi

Arasaanda Aandi

Annadurai

9,65 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2025
ISBN:
9788198806970
9,65 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

'லாரோகேல், கோட்டைக் கோமகள், கோமளவல்லி இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி... தெரியுமே, மன்னா! தங்கட்கு... நினைவில்லையோ?''அவளா அமைச்சரே! அழகி, ஆமாம், நினைவிலிருக்கிறது - எவர் நெஞ்சிலும் பதியும் ஓவியம்! விதவை, அல்லவா?''ஆமாம் அரசே! விதவை! விருந்தாக வேண்டியவள்.''கோலாகல வாழ்க்கையை வெறுப்பவள் போலும் அந்த வனிதாமணி. நமது கொலுமண்டபத்துக்கு வரத் தயங்கும் காரணம், வேறென்னவாக இருக்கமுடியும்.''விழிமட்டுமல்ல, மன்னா! மங்கையின் சுபாவமே மானுக்குள்ளது போன்றதே. ஒருவகையான கூச்சம்! அத்தகு ஆரணங்குகளிடம், பழகிவிட்டால், தொட்டால் துவள்வதுஅவளிடம் கிடைக்கொணாத இன்பம் பிறக்கும். அவள் தங்கள் அவைக்குத் தேவையான உயிரோவியம். இந்த இடத்தின் அழகு, அவளால் வளரும், மிளிரும். பூந்தோட்டத்தில் தானே பூபதி! புள்ளிக்கலாப மயில் தோகையை விரித்தாடிட வேண்டும், பொட்டலிலா! லாராகேல் கோட்டையின் ரமணி, தங்கள் பார்வையில் இருக்க வேண்டிய பாவை. மேலும், இங்கு இளித்துக் கிடக்கும் நங்கைகள் தங்கள் மனத்திலே ஓர் சோர்வை உண்டாக்கி விட்டனர். உணர்கிறேன் மன்னா, உணர்கிறேன். அந்த உல்லாசி இங்கு உலவினாலே போதும், தென்றலின் இனிமை கிடைக்கும்.''அமைச்சரே! அவள்தான் இங்கு வர மறுக்கிறாளே''மறுத்தால் என்ன! அவள் இங்கு வராவிட்டால் நாம் அங்குப் போவது!''நாமா''ஆமாம்! இப்படி அல்ல; மாறுவேடத்தில்...''வேடிக்கையாக இருக்கும்.''மனத்துக்குப் புதுவிதமான இன்பம் இறையே.''எனக்குக்கூட ஒரே சலிப்புத்தான்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கீதங்கள்! கண்டு கண்டு சலித்துப்போன நடனங்கள்! ஒய்யாரிகளின் சிரிப்பு, காதைக் குடைகிறது,

Artículos relacionados

Otros libros del autor

  • Puthiya Polivu
    Annadurai
    'அம்மாடியோ...! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா...?'சாமி சாட்சியாச் சொல்றேன்...பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கூட வந்து ’கெக்கெபிக்கே’ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா...?நானென்ன மாடப்புறவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடி வந்து, உன் தோளிலே தொத்திக்கிட...சினிமா பார்த்துப் பார்த்து, நீ வேண விளையாட்டக் கத்துகிட்டே... இதோ பாரு... எனக்கு அதெல்லாம் பிடிக்காது சொல்லிட்டேன...
    Disponible

    8,23 €

  • Arappor
    Annadurai
    தமிழ்நாட்டில் இந்தி கட்டாய பாடமாக இருக்க வேண்டுமென்று கருதுபவர்கள் தங்களுடைய தவறை உணரும்படி செய்வதும் இன்றியமையாததாகும்.வட இந்தியருள்ளும் ஒரு சிறு பகுதியினரால் மட்டும் பலப்பல மாறுதல்களுடன் பேசப்படுவதும், இற்றைக்கு 500ஆண்டுகளுக்குள்ளாகவே சமஸ்கிருதம், உருது முதலான மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களையும், சொற்களையும் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பழைய அறிவு நூற்செல்வம் இல்ல...
    Disponible

    8,34 €

  • Chandrodayam
    Annadurai
    'இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்கமுடியவில்லை.''நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு...
    Disponible

    8,68 €

  • Annavin Medaipechu
    Annadurai
    NA ...
    Disponible

    12,78 €